Home செய்திகள் 3 நாட்கள் காணாமல் போயிருந்த 21 வயது இளம் பெண் சடலமாக மீட்பு!

3 நாட்கள் காணாமல் போயிருந்த 21 வயது இளம் பெண் சடலமாக மீட்பு!

66
0

முல்லைத்தீவில் – புதுக்குடியிருப்பில், கிணற்றிலிருந்து யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 31 ஆம் திகதி காணாமல் போயிருந்த குறித்த யுவதி தொடர்பில் மறு நாளான 01/06/2020 அன்று புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டும் இருந்த நிலையிலேயே குறித்த யுவதியின் சடலம் இன்று (03) காலை புதுக்குடியிருப்பு – மாணிக்கபுரம் கிராம அலுவலர் பிரிவில் கிணற்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதே கிராமத்தை சேர்ந்த 21 வயதுடைய இராமலிங்கம் நிறோஜினி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

யுவதியிந் சடலம் கண்டறியப்பட்ட நிலையில் இது கொலையா? தற்கொலையா? என விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.