Home செய்திகள் வடமராட்சியில் – பாடசாலை ஒன்றில் இரவு நேரக் காவலில் இருந்தவர் மர்ம மரணம்!

வடமராட்சியில் – பாடசாலை ஒன்றில் இரவு நேரக் காவலில் இருந்தவர் மர்ம மரணம்!

157
0

வடமராட்சி – புலோலி அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலையில் இரவு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அவரின் சடல்ம் இன்று (ஜூன்-2) மீட்கப்பட்டுள்ளது.

குறித்த காவலாளி நேற்று இரவு பாடசாலையின் காவல் கடமையை பொறுப்பேற்று காவல் கடமையில் ஈடுபட்டுள்ளார். இன்று காலை 6.00 மணிக்கு பகல் கடமையினை பொறுப்பேற்பதற்காக சென்ற காவலாளி கதிரையில் இருந்தவாறு நித்திரையில் இருந்த குறித்த இரவு நேரக் காவலாளியை தட்டி எழுப்பியபோதே அவர் நித்திரை அல்ல உயிரற்ற சடலமாக காணப்படுவதை அறிந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக பருத்தித்துறை காவல் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பருத்தித்துறை காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வடமராட்சிப் பகுதியில் அண்மைக்காலமாக பலர் இவ்வாறு மரணமடைந்து வருவதும், இராணுவத்தினரும், பொலிசாரும் அப்பகுதி மக்களிடையே தேடுதல்கள், தாக்குதல்களை, கைதுகள், பொய் குற்ரச்சாட்டுக்கள் என்பவற்றை மேற்கொண்டுவருவதும் இவ்வாறான மரணங்களில் சந்தேகங்களை எளச்செய்துள்ளது.