Home செய்திகள் கோட்டபாயவின் ஆட்டம் ஆரம்பம் – தேர்தலுக்கு எதிரான அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

கோட்டபாயவின் ஆட்டம் ஆரம்பம் – தேர்தலுக்கு எதிரான அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

76
0

பாராளுமன்ற தேர்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த அனைத்து அடிப்படை உரிமை மனுக்களையும் தள்ளுபடி செய்வதாக உயர்நீதிமன்றத்தின் ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் சற்று முன்னர் அறிவித்துள்ளது.

இதன்படி அந்த மனுக்கள் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றுடன் (02/06) கோட்டபாயவின் 3 மாத தற்காலிக ஆட்சி நிறைவுற்றதை அடுத்து தனக்கும், தனது ஆட்சிக்கும் இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது என ஊகித்த அவர் தனது அதிகாரங்களை (நிறைவேற்று அதிகாரம் + சர்வாதிகாரம்) பிரயோகிக்க ஆரம்பித்துள்ளதன் வெளிப்பாடே உயர் நீதிமன்றின் திடீர் தீர்ப்பாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சுகாதார விதிமுறைகளை பேணி தேர்தலை நடாத்துவதற்கு சட்டரீதியான சிக்கல்கள் எதுவும் இல்லை எனில் தேர்தலை நடாத்தவும், புதிய திகதியை அறிவிக்கவும் தான் தயார் என தேர்தல ஆணையாளர் கஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.