Home செய்திகள் 70 நாட்களின் பின் வழமைக்குத் திரும்பிய “யாழ், திருநெல்வேலி சந்தை”

70 நாட்களின் பின் வழமைக்குத் திரும்பிய “யாழ், திருநெல்வேலி சந்தை”

62
0

சமூக இடைவெளி மற்றும் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற கூடியவாறான ஏற்பாடுகள் ஏற்கனவே ஒழுங்குசெய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பொதுச்சந்தை வழமைக்கு திரும்பியது.

இந்று (01/06) அதிகாலை 5:00 மணி முதல் சந்தை திறக்கப்பட்டு சந்தை வியாபாரிகள், பொதுமக்கள் சந்தை நடவடிக்கையில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இதேவேளை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதை கண்காணிக்கும் வேலைத் திட்டங்களில் ஈடுபட்டு வருவதோடு, திருநெல்வேலி சந்தை அமைந்துள்ள ஆடியபாதம் வீதியானது காலை 6- 12 மணி வரை ஒரு வழிப்பாதையாக பொதுமக்களை பயன்படுத்துமாறு பொலிஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளது.