Home முக்கிய செய்திகள் தமிழ் கலாச்சார படுகொலை – 39 ஆண்டுகளின் முன் எரியூட்டப்பட்ட யாழ் நூலகம்!

தமிழ் கலாச்சார படுகொலை – 39 ஆண்டுகளின் முன் எரியூட்டப்பட்ட யாழ் நூலகம்!

149
0

ஆசிய கண்டத்தின் மிகப்பெரும் பொக்கிஷமாகவும், இலங்கை தமிழர்களின் அரிய சொத்தாகவும் திகழ்ந்த “யாழ் நூலகம்” எரிக்கப்பட்ட திஉயர நாளின் 39ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

1948 இல் இருந்து பெளத்த சிங்கள பேரினவாதிகளின் பிடிக்குள் சிக்குண்ட இலங்கையில் 1956ஆம் ஆண்டு முதல் தமிழினத்தை அடக்கி ஆளவும், தமிழர்களின் வரலாறு சான்றுகளை அழித்து உரிமைகளை பறித்து எடுக்கும் சர்வாதிகார ஆட்சி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

அதன் ஓர் அங்கமகவும், தமிழர்களின் வரலாற்று சான்றுகளையும், அறிவையும் சிதைக்கும் நோகில் அப்போதைய இலங்கை ஆட்சியாளர்களாகிய ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் திட்டத்தில் 01.06.1981 அதிகாலை 1:00 மணியளவில் சிங்களக் காடையர்களால் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரும் “தமிழின கலாச்சார படுகொலையே” யாழ் நூலக எரிப்பாகும்.

இந்த சம்பவத்தின் போது உலகத் தமிழர்களின் சொத்தாக பல நூற்றாண்டு காலமாக பாதுகாக்கப்பட்டு வந்த சுமார் 97,000 (தொண்ணூற்று ஏழாயிரம்) நூல்கள் தீயில் எரிந்து அழிந்துபோயின.

இலங்கைத் தீவில் இடம்பெற்ற தமிழின அழிப்பின் அதி உச்சமான “தமிழின அழிப்பை” 2009 இல் அரங்கேற்றிய அப்போதை ஆட்சியாளர்களாகிய மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான சிறீலங்கா சுதந்திரக் கட்சி அரசினால் யாழ் நூலகம் இருந்த இடத்தில் மீளவும் யாழ் நூலக கட்டிடம் அமைக்கப்பட்ட போதும் அங்கு வெறும் 1500 வரையான நூல்களே தற்போது உள்ளன. இவை வெறும் கண்துடைப்பிற்காகவும், சர்வதேசத்தை தாம் இனவாதிகள் அல்ல என காட்டுவதற்காகவும் வெளி நாட்டுக்கடனில் செய்யப்பட்ட ஓர் தந்திரோபாய நடவடிக்கையே அன்றி வேறொன்றும் இல்லை.

அதுமட்டும் அன்றி அரசியல் இலாபத்திற்காக ஐக்கிய தேசியக் கட்சி போன்று தாம் இல்லை எனவும் தமிழர்களுடன் சேர்ந்து வாழவும், அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்கவும் தாம் தயார் எனக் காட்டும் அரசியல் நகர்வாகவும், தமது வாக்கு வங்கியை நிரப்பும் தந்திரோபாய நடவடிக்கையாகவுமே யாழ் நூலகம் மீள அமைக்கப்பட்டதும், யாழ் மாவட்டத்தில் கார்ப்பெட் வீதி அமைக்கப்பட்டு மக்கள் மனங்களை வெல்ல முயன்றதும் ஆகும்.