
1 கோடி 22 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட “பொது வசதிக் கூடம்” ஒன்று இன்று மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது.
கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச சமை உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
குறித்த பொது வசதிக் கூடத்தில் குழந்தைகளுக்கு பாலூட்டும் மற்றும் உடை மாற்றும் அறை, குளியல் அறை, விசேட தேவை உடையோருக்கான குழியல் அறை, விசேட தேவை உடையோருக்கான மலசல கூடம், மற்றும் ஆண், பெண் இருபாலாருக்குமான தனித்தனி மலசல கூடம் ஆகியன உள்ளமை குறிப்பிடத்தக்கது.
