Home செய்திகள் இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா நோயிற்கு பலி!

இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா நோயிற்கு பலி!

64
0

இலங்கையில் மற்றுமொருவர் கொரோனா வைரஸ் தொற்றால் இன்று (01/06) காலை உயிரிழந்துள்ளார்.

ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறாக உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் அண்மையில் குவைத் நாட்டில் இருந்து இலங்கை வந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரின் இறப்பை தொடர்ந்து இலங்கையில் கொரோனா நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை இலங்கையின் மொத்த கொரோனா நோயாளர் எண்ணிக்கை 1633 ஆக உயர்வடைந்துள்ளது.