Home செய்திகள் யாழில், மாதங்களில் 2195 பேர் டெங்கு நோயால் பாதிப்பு!

யாழில், மாதங்களில் 2195 பேர் டெங்கு நோயால் பாதிப்பு!

83
0

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களில் மட்டும் 2195 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பொது மருத்துவ நிபுணர் த.பேரானந்தராஜா தெரிவித்தார்.

தற்போது டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்ககூடிய சாத்திய கூறுகள் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காணப்படுகின்றது. எனவே தமது சுற்றாடலை சுத்தமாக வைத்திருக்காவிட்டால் டெங்கு நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள முடியாது எனவும் அவர் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

டெங்கு நோயிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான முயற்சியில் சுகாதாரப் பிரிவினர் ஈடுபட்டுள்ளதோடு, அடுத்த வாரத்தை டெங்கு விழிப்புணர்வு வாரமாக யாழ். மாவட்டச் செயலாளர் அறிவித்துமுள்ளார்

கடந்த வருடம் இலங்கையில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தார்கள். அதில் யாழ்ப்பாணம் மாவட்டத்யில் எட்டாயிரம் பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.