Home முக்கிய செய்திகள் ஜூன் 2ம் திகதியுடன் முடிவடையும் கோட்டபாயவின் ஜனாதிபதி ஆயுட்காலம்!

ஜூன் 2ம் திகதியுடன் முடிவடையும் கோட்டபாயவின் ஜனாதிபதி ஆயுட்காலம்!

81
0

இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின் 3 மாதங்கள் மட்டுமே ஆயுட்காலம் கொண்ட “ஜனாதிபதி ஆட்சி” நாளை மறு நாள் (ஜூன் 2) செவ்வாய்க்கிழமையுடன் முடிவடையவுள்ள சூழலில் நிறைவேற்று அதிகாரமா..? அல்லது சட்டவாக்கு சபையின் அதிகாரமா…? என்ற நெருக்கடி சூழலுக்குள் இலங்கையின் ஆட்சி தள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய அரசியல் அமைப்பின் பிரகாரம் ஜூன் 2, முதல் சட்டவாக்கு சபையான பாராளுமன்றத்திற்கு செல்வதால் பாராளுமன்றத்தை கூட்டும் அதிகாரன் சபாநாயகருக்கு உண்டு என்ற கட்டளையை உயர் நீதிமன்றத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஐக்கிய தேசியக் கட்சி உட்பட மகிந்த குடும்ப ஆட்சிக்கு எதிரான பல கட்சிகள் இறங்கியுள்ளன.

இருப்பினும் தமக்கு கிடைத்த வாய்ப்பை நளுவவிட விரும்பாத கோட்டபாயவும், ராஜபக்ஷக்கள் குளாமும் நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி தமது ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், அடுத்த சில வாரங்கள் இராணுவ அடக்குமுறையும், காவல்துறையினரால் அரசியல்வாதிகள் உட்பட பல கைதுகளும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.