Home தாயக செய்திகள் பொதுத் தேர்தல் 3 மாதங்கள் வரையில் பின் போகலாம்: கோட்டபாய ராஜபக்ஷ

பொதுத் தேர்தல் 3 மாதங்கள் வரையில் பின் போகலாம்: கோட்டபாய ராஜபக்ஷ

71
0

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் கருத்துக்களைப் பார்க்கும்போது “நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இன்னமும் மூன்று மாதங்கள் வரை செல்லும்” என தான் நினைப்பதாக இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு கவலையுடன் தெரிவித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

“உயர்நீதிமன்றத் தீர்ப்பு வந்து 9 தொடக்கம் 11 வாரங்களுக்குள் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கூறியுள்ளார். அப்படியாயின் எப்படியோ இன்னும் மூன்று மாதங்களுக்குத் தேர்தல் இழுபடப் போகின்றது.

ஏற்கனவே மூன்று மாதங்கள் இழுபட்டதால் மொத்தமாக 6 மாதங்கள் நாட்டின் பணிகள் தடைப்பட்டுக் கிடக்கும் நிலைமை உருவாகியுள்ளது” எனவும் அவர் தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.