Home முக்கிய செய்திகள் ஜநாதிபதி, பிரதமர் உட்பட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொண்டமானின் பூதவுடலுக்கு அஞ்சலி:

ஜநாதிபதி, பிரதமர் உட்பட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொண்டமானின் பூதவுடலுக்கு அஞ்சலி:

70
0

காலஞ்சென்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், சமூக வலுவூட்டல் மற்றும் மலையக உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் இன்று (28/05) பாராளுமன்ற வளாகத்துக்குக் கொண்டுவரப்பட்டு பாராளுமன்ற ஒன்றுகூடல் மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்கள் மற்றும் எட்டாவது பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற வளாகத்தில் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.