Home செய்திகள் ஆறுமுகம் தொண்டமானின் இறுதிக் கோரிக்கைகள் இரண்டும் நிறைவேற்றப்படும்:

ஆறுமுகம் தொண்டமானின் இறுதிக் கோரிக்கைகள் இரண்டும் நிறைவேற்றப்படும்:

81
0

ஆறுமுகம் தொண்டமான இறப்பதற்கு சில மணி நேரங்கள் முன் என்னிடம் அவரால் முன்வைக்கப்பட்ட இறுதிக் கோரிக்கைகளை நிறைவேற்ற வெண்டும் என இலங்கபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் காலமாகுவதற்கு சற்று முன் தன்னைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்ததை நேற்று (27/05) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது நினைவுகூர்ந்த பிரதமர் மஹிந்த மேற்கண்டவாறு கூறினார்.

தோட்டத் தொழிலாளர்களிற்கு 1,000 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும், ஈ.பி.எவ் கொடுப்பனவு பற்றி பேசினார். இதை பேசி சிறிது நேரத்தின் பின்னர் அவர் உயிரிழந்துவிட்டமையால் அவரது இந்த இரண்டு கோரிக்கைகளையும் விரைவில் நிறைவேற்ற வேண்டும் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.