Home செய்திகள் வல்லிபுரம் கோவில் அருகே வெடிகுண்டு வெடித்தத்தில் பொலிஸ் படுகாயம்!

வல்லிபுரம் கோவில் அருகே வெடிகுண்டு வெடித்தத்தில் பொலிஸ் படுகாயம்!

69
0

வடமராட்சி கிழக்கு பகுதியில் அமைந்துள்ள வல்லிபுரம் கோவிலுக்கு அருகில் நிலத்தில் புதையுண்டிருந்த வெடிகுண்டு ஒன்று வெடித்தத்தில் பொலிஸார் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இன்றைய தினமும் வழமையான வீதி சோதனை நடவடிக்கைக்காக குறித்த சந்திப்பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் பொலிஸ் வந்திறங்கியபோதே நிலத்தில் இருந்த வெடிபொருள் ஒன்றை குறித்த பொலிஸ் காலால் தட்டியபோது அது வெடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பாரிய சேதத்தை ஏற்படுத்தும் கிளைமோர் ரக வெடிகுண்டு அல்ல எனவும், இது உள்ளூர் தயாரிப்பிலான நாட்டு வெடிகுண்டு எனவும் தெரிவித்துள்ள பொலிஸார் அப்பகுதியில் தேடுதல் வேடையை ஆரம்பித்துள்ளதுடன், விசாரணைகளையும் முடுக்கிவிட்டுள்ளனர்.