Home செய்திகள் ஆறுமுகம் தொண்டமானின் இறுதிக் கிரிகைகள் கொட்டகலையில்:

ஆறுமுகம் தொண்டமானின் இறுதிக் கிரிகைகள் கொட்டகலையில்:

72
0

அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் இறுதிக் கிரிகைகள் எதிர் வரும் ஞாயிற்றுக் கிழமை பூரண அரச மரியாதைகளுடன் கொட்டகலையில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள அன்னாரது இராஜகிரிய இல்லத்தில் தற்போது அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அன்னாரின் பூதவுடல், நாளை நாடாளுமன்ற கட்டடத் தொகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து கொழும்பிலுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரசின் கட்சித் தலைமையகமான சௌமியபவனுக்கு கொண்டுசெல்லப்படவுள்ளது.

அதன்பின்னர் அங்கிருந்து றம்பொடையிலுள்ள அன்னாரின் இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு, மீண்டும் பூதவுடல் கொட்டகலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கு மக்களின் அஞ்சலி நிகழ்வுகள் நிறைவு பெற்றபின்னர், கொட்டகலையில் இறுதிக்கிரியைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.