Home செய்திகள் இன்று ஆரம்பமானது – யாழில் இருந்து வெளி மாவட்டங்களுக்கான பேரூந்து சேவை:

இன்று ஆரம்பமானது – யாழில் இருந்து வெளி மாவட்டங்களுக்கான பேரூந்து சேவை:

105
0

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து சேவைகள் வெளி மாவட்டங்களுக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எனினும் தனியார் பேருந்து சேவைகள் வடக்கு மாகாணத்துக்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு மட்டுமே தனியார் போக்குவரத்து சேவை இடம்பெற்று வருகின்றது.

இதேவேளை உள்ளூர் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து பேருந்து சேவையை அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பொதுமக்களின் போக்குவரத்தினை இலகுபடுத்தும் முகமாக உள்ளூர் சேவைகள் அதிகரிக்கப்படவுள்ளன என யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலைய பொறுப்பதிகாரி எஸ்.தனராஜ் தெரிவித்தார்.