Home செய்திகள் வடக்கின் அடுத்த ஆளுநராகும் முன்னாள் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க:

வடக்கின் அடுத்த ஆளுநராகும் முன்னாள் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க:

101
0

ஓய்வுபெற்ற முன்னாள் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்கவை அடுத்த வட மாகாண ஆளுநராக நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தற்போது வடக்கு மாகாண ஆளுநராக இருக்கும் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் தேர்தல் காலம் முடிந்த பின் அவர் சுயவிருப்பின் பெயரில் ஓய்வுபெறவுள்ள நிலையிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இத் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன்.

தன்னைச் சுற்றியும், நாட்டிலும் இராணுவமயமாக்கலை செய்துவரும் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தில் இனி வரும் காலங்களில் முக்கிய பொறுப்புக்களில் அமர்த்தப்படுவோர் இராணுவ முகமே என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

பதவிக்கு வந்த புதிதில் சகோதரர் மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய அழுத்தத்தால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனக்கு நம்பகமான சிவில் அதிகாரிகளை தேடிப் பிடித்து பதவிகளில் அமர்த்திய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இப்போது எந்தத் தலையீடும் இல்லாமல் இராணுவத்தினரைப் பதவிகளில் அமர்த்தி வருகின்றமை தெரிந்ததே.

அவரின் 6 மாத ஆட்சிக் காலத்துக்குள் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் 26 பேரை சிவில் நிர்வாக உயரதிகாரிகளாக நியமித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது