Home செய்திகள் இலங்கையில், பொது போக்குவரத்து நாளை முதல் ஆரம்பம்:

இலங்கையில், பொது போக்குவரத்து நாளை முதல் ஆரம்பம்:

136
0

இலங்கையில் கடந்த 10 வாரங்களுக்கும் மேலாக மாவட்டங்களுக்கு இடையே இயங்காமல் இருந்த பொது போக்குவரத்து சேவைகள் நாளை முதல் இடம்பெறவுள்ளதாக போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தகவல் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் தகவல் வெளியிட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர, கொழும்பு, கம்பஹா மாவட்டங்களை தவிர, ஏனைய மாவட்டங்களுக்கு இடையில் பஸ் சேவைகள் இடம்பெறும் எனவும், கொழும்பு கண்டி வீதியில் இடம்பெறும் மாகாணங்களுக்கிடையிலான பேருந்து சேவைகள் நிட்டம்புவ வரையில் மாத்திரமே இடம்பெறும் எனபதோடு, இலக்கம் 05 வீதி ஊடாக செல்லும் மாகாணங்களுக்கிடையிலான பேருந்துகள் மினுவாங்கொடைவரை மாத்திரமே செல்லும். அதே போல் காலி வீதி ஊடாக செல்லும் பேருந்துகள் பாணந்துறைவரையிலும் ஹைலெவல் மற்றும் லோலெவல் வீதிகள் ஊடாக செல்லும் பேருந்துகள் அவிசாவளை வரை பயணிக்கும். எனவும் அவர் தெரிவித்தார்.

அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்துகள் கொட்டாவ வரையில் மாத்திரமே பயணிக்கும் என்றும் அனுராதபுரம், புத்தளம் மற்றும் குளியாப்பிட்டிய ஆகிய இடங்களில் இருந்து நீர்கொழும்பு வீதியில் கொழும்பு செல்லும் பேருந்துகள் நீர்கொழும்பில் நிறுத்தப்படவேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

சுகாதார பிரிவினரினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைய, பேருந்து சேவைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.