
இஸ்லாமியர்களின் திருநாளான “றம்ளான் பண்டிகையை” இம்முறை ஊரடங்கு சட்டத்தின் காரணமாக இலங்கை மக்கள் வீடுகளுக்குள் அமைதியாக முன்னெடுத்தனர்.
இஸ்லாமியர்களுக்கு உரித்தான ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான “றம்ளான் நோன்பு” வரும் மாதம் இஸ்லாத்தில் புனித மாதகமாக மதிக்கப்படுகிறது.
முப்பது (30) நாட்கள் உண்ணாமல் இருந்து இறைமறையை ஓதி, இறைவழிபாட்டில் முழுமையாக தம்மை அர்ப்பணித்து அதன் இறுதி நாளில் அனைவரும் ஒன்று சேர்ந்து பெரு நாளாக கொண்டாடுவார்கள்.
இலங்கைத் தீவில் தமிழினமும், அவர்களின் வரலாற்று தடங்களும் வகை தொகை இன்றி அழிக்கப்பட்டு வரும் சூழலில் முள்ளிவாய்க்கால் பேரழிவில் அடுத்த கட்டமாக தமிழர்களின் இன்னுமோற் அங்கமாக இருக்கும் இஸ்லாமியர்கள் மீதும் அடக்கு முறைகள் ஆரம்பித்துள்ளன. ஆனால் தாம் தமிழர்கள் என்பதை ஏற்காது இஸ்லாமியர்கள் என்ற வட்டத்திற்குள் பிரிந்து நின்று சிங்கள பேரினவாதிகளின் சதிவலைகளுக்குள்ளும், அடக்குமுறைகளுக்குள்ளும் சிக்கி தமது உரிமைகளையும், சுதந்திர நடமாட்டங்களையும் இழந்து வருகிறது இலங்கை இஸ்லாமிய மக்கள்.
இனத்தால் “தமிழர்” என்ற ஒற்றுமையோடு சிங்கள ஆதிக்கத்தை எதிர்த்து நின்றால் மட்டுமே இனி வரும் காலங்களில் சிறுபான்மையினர் ஆக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு (இந்து, இஸ்லாம்,கிறீஸ்த்தவம்) இலங்கைத்தீவில் இடமும், உரிமையும் இருக்கும் என்பதே இன்றைய காலம் உணர்த்தி நிற்கிறது.