Home செய்திகள் கீரிமலையில் பொலிஸ் மீது வாள் வெட்டு – இருவர் கைது!

கீரிமலையில் பொலிஸ் மீது வாள் வெட்டு – இருவர் கைது!

66
0

காங்கேசந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கீரிமலை – நகுலேஸ்வரம் கொலனி பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஆபத்தான ஆயுதங்களுடன் இடம்பெற்ற மோதலின் போது தடுக்க சென்ற பொலிஸ் மீது வாள் வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று (23/05) இரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பொலிஸார் ஆயுத முனையில் ரவுடிகளை அடக்கியதோடு அதில் காவல்துறைமீது வாள் வெட்டு நடாத்திய இருவரை கைது செய்துள்ளனர்.