Home செய்திகள் எதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:

எதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:

54
0

ஹோமாகம – தியகம பகுதியில் பிரம்மாண்டமாக நிர்ணயிக்கப்பட இருந்த “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்கு” திட்டம் பல எதிர்ப்புக்களை அடுத்து கைவிடப்பட்டுள்ளது.

குறித்த விளையாட்டரங்கம் அமைப்பது தற்போது நாடு இருக்கும் நிலையில் தேவை தானா..? என பலதரப்பட்ட மட்டங்களிலும் கேள்வி எழுப்பப்பட்டிருந்ததோடு எதிர்ப்புகளும் வலுத்திருந்தன.

இந்த நிலையில், இன்று (21/05) வியாழக்கிழமை இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இலங்கை கிரிக்கட் வீரர்கள், மற்றும் இலங்கை கிரிக்கட் முன்னாள் வீரர்களுடனும் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னே குறித்த விளையாட்டரங்கம் அமைக்கும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.