
(கவி-0422) டெல்லியில் உள்ள தமிழ் வழக்கறிஞர்கள் சார்பில் இந்திய கொலமினியூஸ்ட் கட்சியின் தலைவர் டி.ராஜா அவர்கள் முன்னிலையில் இன்று (18/05) முள்ளிவாய்க்கால் நினைவு இரங்கல் கூட்டமும், அஞ்சலி நிகழ்வும் நடைபெற்றது.
இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரும் தமிழின அழிப்பு நிகழ்வான முள்ளீவாய்க்கால் பேரவலத்திற்கு இன்றுவரை ஐ.நா வால் எந்த விதமான நீதியும் வழங்கப்படாது மாறாக தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்தை பாராட்டியும், உதவிகள் வழங்கி ஊக்குவித்தும் வரும் சூழலில், தமிழ்த் தேசியத்தின் கறுப்பு நாளாக உலகத் தமிழர்களால் முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நினைவுகூரப்பட்டு வருகிறது.
இன்றைய இந்த நிகழ்வில் பல வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு சுடரேற்றி அஞ்சலி தெலுத்தியிருந்தனர்.
