Home செய்திகள் அமைச்சுக்களில் படைத்தரப்பு ஆளுமையை அதிகரிக்கும் கோத்தா!

அமைச்சுக்களில் படைத்தரப்பு ஆளுமையை அதிகரிக்கும் கோத்தா!

77
0

கோத்தபாய ராஜபக்ஷ அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் தன்னைச் சுற்றி முக்கிய பொறுப்புக்கள்இல் இராணுவ மயமாக்கலை செய்துவருவது கண்கூடு.

அந்த வகையில், தற்போதும் மேலும் இரு இராணூவ அதிகாரிகளை இரு அமைச்சின் செயலாளர்களாக நியமித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்கவும், மகாவலி,விவசாய, நீர்ப்பாசன் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் சுமேத பெரேராவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது நாட்டில் உள்ள கொரோனா பரவல் தேர்தலை பாதிகும் என்பதால் கொரோனா நோயாளர் எண்ணிக்கை, மற்றும் உயிரிழப்பு தொடர்பாக தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளும் நோக்கம் கொண்டதாகவே இவ் இரு புதிய நியமனங்களும் அமைந்துள்ளனர். 

ஏனெனில் ஏற்கனவே தேர்தல் ஆணையகம் ஜீன் 22 இல தேற்தலை வைக்கலாம் என்று அறிவித்திருன்தாலும், அதற்கு முன்னர் 5 வாரங்களேனும் நாடு இயல்பு நிலைக்கு திரும்பி இருக்க வேண்டும் என்பதோடு, சுகாதார அதிகாரிகளிடம், அனைத்து மாவட்ட    அரச செயலர்களிடமும் கலந்துரையாடி அதில் திருத்தி  ஏற்பட்டால் மட்டுமே தேர்தல் நடைபெறும் என அறிவித்திருந்தது.

இந்த நிலையிலேயே, கொரோனா நோயாளர் எண்ணிக்கை தினமும் கூடிக்கொண்டு செல்லும் இவ் வேளையில், அது தேர்தலை பாதித்துவிடக் கூடாது என்பதற்காக ஜனாதிபதி கோத்தாபாய இவ் அவசர நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதஅக தெரிகிறது.

இது தவிர ஏற்கனவே கோத்தபாய அரசாங்கத்தில் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறீ, மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய, மேஜர் ஜெனரல் எஸ்.டபிள்யூ.எல்.தவுலகல,  மேஜர் ஜெனரல் சாந்த திசநாயக்க, மேஜர் ஜெனரல் கே.பி.எகொடவெல, மேஜர் ஜெனரல் தர்ஷன கெட்டியாராச்சி, மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சி, மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா, மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண, ஜெனரல் தயா ரத்நாயக்க, அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம, அட்மிரல் ஜயநாத் கொலம்பகே, றியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ், அட்மிரல் ஒவ் த பிளீட் ரொஷான் குணதிலக, பிரிகேடியர் சுரேஸ் சாலே ஆகிய படைத்தரப்பு அதிகாரிகளை சிவில் நிர்வாக பதவிகளில் கோத்தபாய ராஜபக்ஷ அமர்த்தியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நடக்கவிருக்கும் தேற்தலிலும் கோத்தாபாய அரசாங்கம் பெரும்பான்மையுடன் பதவியேற்றால் அவரின் ஆட்சிக் காலத்தில் அனைத்து அமைச்சுப் பதவிகளும் மட்டு மன்றி நாடே இராணூவ கட்டுப்பாட்டிற்குள் செல்லும் என்பதும், அதன் பின்னர் யாப்பில் கூட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு ஜனாதிபதியாக காலவரை யின்றி கோத்தபாய இருப்பதற்கும் வாய்ப்புக்கள் இருப்பதை உணர்ந்து உள் விரோதங்களை ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு தமிழர் தரப்பு ஓரணியில் குளப்பமின்றி நின்றாலே இனி விடிவு.