Home செய்திகள் மே 17, 18 இல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த அரசு தீர்மானம்:

மே 17, 18 இல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த அரசு தீர்மானம்:

74
0

இலங்கையில், முள்ளிவாய்க்கால் பேரவல நினைவு கூரலை தடுக்கும் முகமாக நாடளாவிய ரீதியில் 17, 18 ஆம் திகதிகளில் ஊரடங்கு உத்தரவிற்கு அரசு திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பின்னர் மறு நாளான 19ஆம் திகதி தொடக்கம் 23ஆம் திகதி வரையில் கொழும்பு, ஹம்பகா தவிர்ந்த ஏனைய 23 மாவட்டங்களிலும் தினமும் இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரையில் ஊரடங்கு அமுலில் இருக்கும் எனவும் அறியக்கிடைத்துள்ளது.

பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் பேரவல நினைவை வடக்கு, கிழக்கில் தமிழர்கள் நினைவுகூர ஆரம்பித்துள்ள நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவு தினமான மே 18 அன்று பெருமளவான மக்கள் பல இடங்களில் ஒன்றுகூடலாம் என்பதால் இந்த நடைமுறைக்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.