Home செய்திகள் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் தொடர்பில் தமிழ் சிவில் சமூக அமையம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை:

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் தொடர்பில் தமிழ் சிவில் சமூக அமையம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை:

69
0

இராணுவமயமாக்கல் மற்றும் அச்சுறுத்தும் கொரோனோவுக்கு மத்தியில் தமிழர்கள் நாம் இம்முறை “முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை” இல்லங்களில் இருந்து ஆரம்பிப்போம் என தமிழ் சிவில் சமூக அமையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தமிழ் சிவில் சமூக அமையத்தால் இன்று (14/05) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

தமிழினப் படுகொலையின் நினைவேந்தலை எமது இல்லங்களில் இருந்து ஆரம்பிப்போம்

தமிழினப் படுகொலையின் 11ஆவது நினைவு நாளை தமிழ் தேசம் எதிர்வரும் மே மாதம் 18ஆம் திகதி அனுட்டிக்கவுள்ளது. ஆழமாகிவரும் இராணுவமயமாக்கல், அச்சுறுத்தும் கொரோனோவுக்கு மத்தியில் நாம் இம்முறை இந்த நினைவு நாளை அணுக வேண்டியுள்ளது.

பொறுப்புக்கூறல் போராட்டம் இந்த தலைமுறையோடு முடிவடையாது என்பதும் தலைமுறை கடந்ததாக அமையும் என்பதும் எமக்கு கடந்த வருடம் உணர்த்திய பாடங்கள்.

நீண்ட, தலைமுறை கடந்த நீதிக்கான போராட்டத்திற்கான நிறுவனம் சார் ஏற்பாடுகளையும் கட்டமைப்பு சார் செயற்பாடுகளையும் நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்த போராட்டத்திற்கு தேவையான கூட்டு உள வலிமையையும் ஓர்மத்தையும் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

முள்ளிவாய்க்கால் அவலத்திற்குப் பின் பிறந்த ஓர் தலைமுறை எமது தாயகத்தில் வளர்ந்து
வருகின்றது. அந்த தலைமுறைக்கு எமது தேசத்தின் வரலாற்றையும் போராட்டத்தின் வரலாற்றையும் நாம் அனுபவித்த அனுபவிக்கும் ஒடுக்குமுறையையும் பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும். அந்த ஒடுக்குமுறையோடு வாழப் பழகாதிருக்க, அவ்வொடுக்கு முறையிலிருந்து அவர்களைத் தற்காத்துக் கொள்வதற்கான வழிவகைகளை நாம் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். அவ்வாறான தற்காப்பு பொறிமுறைகளில் ஒன்று நினைவேந்தல்களை முறையாக ஒழுங்கமைத்துக் கொள்வது.

அந்த வகையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவினால் ஏலவே கோரப்பட்டுள்ளவாறு
இந்த முறை நாம் நினைவேந்தலை எமது இல்லங்களில் இருந்து ஆரம்பிப்போம்.

பின்வரும் மூன்று செயற்பாடுகளில் தாயகத்திலும், புலத்திலும் உள்ள அனைவரும் இணைந்து கொள்ள வேண்டும் என அன்புரிமையுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவோடு இணைந்து கேட்டுக் கொள்கின்றோம்:

  1. * மே 18 2020 அன்று இரவு 7 மணிக்கு வீடுகளில் த Pபங்கள் ஏற ;றி முள்ளிவாய்க்கால்
    இனப்படுகொலையை நினைவுகூரல்.
  2. * மே 18 2020 அன்று எமது மக்கள் போரின் இறுதி நாட்களில் உட்கொண்ட கஞ்சியை
    அன்றைய தினம் ஒரு வேளையேனும் உணவாகாராமாக்கிக் கொள்ளல்.
  3. * மே 18 2020 அன்று இரவு 7 மணிக்கு அனைத்து வணக்கத ;தலங்களிலும் விசேட மணி
    ஒலி எழுப்பி பேரவலத்தை நினைவேந்தல்.
  4. இத ;தகைய செயற ;பாடுகள் நினைவேந்தலை சமூகமயப்படுத்த உதவும் என நாம் நம்புகிறோம்.
    எமக்குள் என்றும் நீங்கா அந்த நினைவு விளக்கை தூண்டி விட அனைவரும் கரம் கோர்ப்போம்.
    நன்றி
  5. (ஒப்பம்) (ஒப்பம்)
    அருட்பணி வ P. யோகேஸ்வரன் கலாநிதி. குமராரவடிவேல் குருபரன்
    இணைப் பேச்சாளர் இணைப் பேச்சாளர்
    தமிழ் சிவில் சமூக அமையம்