Home செய்திகள் இலங்கையில், கடந்த 24 மணித்தியாலங்களில் 26 புதிய கொரோனா நோயாளர்!

இலங்கையில், கடந்த 24 மணித்தியாலங்களில் 26 புதிய கொரோனா நோயாளர்!

52
0

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 26 புதிய நோயாளர்கள் இனம்காணப்பட்டதை அடுத்து கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 915ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 524 பேர் இதுவரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 382 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா நோயினால் இதுவரை 9 பேர் மட்டுமே இறந்துள்ளதாக இலங்கை உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.