Home செய்திகள் இணுவிலில் வாள் வெட்டு – தலை தூக்கும் குற்றச் செயலகள்:

இணுவிலில் வாள் வெட்டு – தலை தூக்கும் குற்றச் செயலகள்:

62
0

யாழ்/நல்லூர் பிரதேச சபை ஊழியர் மீது இன்று வாள் வெட்டுத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இணுவில் காரைக்கால் இந்து மயானத்திற்கு அருகில் வைத்து இனந்தேரியாதோரால் மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டுத் தாக்குதலில், யாழ்/நல்லூர் பிரதேச சபை ஊழியரான சுன்னாகம் ரயில் நிலைய வீதியைச் சேர்ந்த 44 வயதுடைய தே.நடேசு என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.