Home செய்திகள் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் – செம்மணியில் கற்பூரம் ஏற்றி மக்கள் அஞ்சலி!

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் – செம்மணியில் கற்பூரம் ஏற்றி மக்கள் அஞ்சலி!

194
0

இலங்கையில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையின் அதி உச்சமாகவும், மாறாத றணமாகவும் அமைந்துவிட்ட “முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை” யை நினைவு கூரும் முள்ளிவாய்க்கால் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் செம்மணி வெளியில் மக்கள் கற்பூரம் ஏற்றி தமது அஞ்சலிகளை செலுத்தி வருகின்றனர்.

தகவல் அறிந்து காவல் துறையினர் அங்கு சென்று மக்களை விரட்டிய போதும், தாம் உயிர் துறந்த தமது உறவுகளை நினைந்து அஞ்சலிப்பதாகவும், சட்டத்தை மீறாமல் சமூக இடைவெளியை கடைப்பிடித்தே தாம் தமது அஞ்சலிகளை செய்வதாகவும் கூறி எதிர்ப்பையும் மீறி மக்கள் அஞ்சலித்ததை காணக்கூடியதாக இருந்தது.