Home செய்திகள் செருப்பு மாலை அணிவிக்கப்பட்ட சுமந்திரன் உருவ பொம்மை:

செருப்பு மாலை அணிவிக்கப்பட்ட சுமந்திரன் உருவ பொம்மை:

207
0

கடந்த பல வருடங்களாக தமிழ்த் தேசியத்திற்கு எதிரான நகர்வுகளை மேற்கொண்டவரும், அண்மையில் ஆயுதப் போராட்டம் தொடர்பில் சர்ச்சையான கருத்தை தெரிவித்தவருமான முன்னாள பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு நல்லூர் ஆலய வீதியில் வைக்கப்பட்டுள்ளது.

இந்று காலை இனந்தெரியாதோரால் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு “நான் ஒரு தமிழின துரோகி” எனும் வாசகம் கொண்ட பதாகையை தாங்கியிருப்பது போல் வைக்கப்பட்டிருந்த சுமந்திரனின் உருவ பொம்மை குறித்த தகவல் அறிந்த யாழ் மாணகர காவல்துறையினர் அங்கு விரைந்து முதலில் மட்டைகள் கொண்டு சுமந்திரனின் மானத்தை காக்க முயன்றதுடன் அங்கிருந்து குறித்த உருவ பொம்மையையும் தமது ஜீப் வாகனத்தில் ஏற்றி சென்றனர்.