Home செய்திகள் 12.5 தொன் மருந்துப் பொருட்களுடன் இலங்கை வந்தடைந்தார் தூதுவர் கோபால் பாக்லே:

12.5 தொன் மருந்துப் பொருட்களுடன் இலங்கை வந்தடைந்தார் தூதுவர் கோபால் பாக்லே:

115
0

இலங்கைக்கான புதிய இந்திய தூதுவராக கோபால் பாக்லே 12.5 தொன் மருந்துப்பொருட்களுடன் இந்திய விமானப்படை விமானத்தில் நேற்று (08/05) வெள்ளிக்கிழமை இலங்கையினை வந்தடைந்துள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சக பேச்சாளராகவும் இந்திய பிரதமர் அலுவலகத்திலும் பணியாற்றிய பாக்லே கடந்த பெப்ரவரி மாதம் இலங்கைக்கான புதிய தூதுவராக நியமிக்கப்பட்டிருந்த போதும் கொரோனா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக தனது கடமையை பொறுப்பேற்க முடியாத சூழல் ஏற்பட்டது.

இந்நிலையிலேயே அவர் மருந்துப்பொருட்களுடன் இந்திய விமானப்படையின் விமானத்தில் இலங்கை வந்துள்ளமையும், கொரோனா வைரஸ் நெருக்கடி உருவான பின்னர் இலங்கைக்கு இந்தியா மருந்துப்பொருட்களை அனுப்பிவைத்துள்ளமை இது நான்காவது தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.