Home செய்திகள் ஹயஸ் பேல் ஏறிய லொறி – மூவர் காயம்!

ஹயஸ் பேல் ஏறிய லொறி – மூவர் காயம்!

72
0

மாங்குளம்- பனிக்கன்குளம் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்தில் ஹயஸ் வாகனத்தில் பயணித்த மூவரில் இருவர், படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹயஸ் வாகன சாரதி மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அனுராதபுரத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த ஹயஸ் வாகனமும், யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த லொறியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.