Home செய்திகள் விடுதலைப் புலிகளிடம் காணப்பட்ட நற்பண்புகூட இன்றைய எதிர்கட்சியினருக்கு இல்லை: கெஹலிய ரம்புக்வெல்ல

விடுதலைப் புலிகளிடம் காணப்பட்ட நற்பண்புகூட இன்றைய எதிர்கட்சியினருக்கு இல்லை: கெஹலிய ரம்புக்வெல்ல

301
0

விடுதலைப் புலிகளிடம் காணப்பட்ட நற்பண்புகூட இன்றைய எதிர்கட்சியினருக்கு இல்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

எமது நாட்டு மக்கள் மிகவும் இலகு மனம் கொண்டவர்கள். சுனாமி அழிவு ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் சந்தைகளிலும் பல்பொருள் அங்காடிகளிலும் பொருட்கள் இருக்கவில்லை. அப்போது சிறுபிள்ளைகள் கூட தங்களால் இயன்றவற்றை இல்லாதவர்களுக்கு கொடுத்துதவினார்கள். ஆடைகளைக்கூட தானம் செய்தார்கள்.

இந்நிலையில் தான் தற்சமயம் அரசாங்கத்திற்கு உதவுமாறு அரச ஊழியர்களிடத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பலாத்காரமல்ல, அவர்களால் முடியுமான உதவியை ஊழியர்கள் செய்யலாம். தற்போதைய எதிர்கட்சி செய்கின்ற செயற்பாடுகளைப் பார்த்தால், அவர்களை விட தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னுதாரணமாக நடந்துகொண்டார்கள் என்றே கூறவேண்டும்.

அதற்காக நான் விடுதலைப் புலிகளுக்கு நற்சான்றிதழ் அளிப்பதாக எண்ணிவிட வேண்டாம். வடக்கில் சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்குப் படையினர் அங்கு சென்ற போது அவர்கள் மீது விடுதலைப் புலிகள் ஆயுதங்களைப் பாவிக்கவில்லை. அந்த சேவைக்கு விடுதலைப் புலிகள் கௌரவம் கொடுத்தார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளிடம் காணப்பட்ட அந்த நற்பண்புகூட இன்றைய எதிர்கட்சியினருக்கு இல்லை என்பதே கவலை என்று தெரிவித்தார்.