Home உலக செய்திகள் திங்கள் முதல் இயல்பு நிலைக்கு திரும்பவுள்ள பிரான்ஸ் – இரண்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு வெவ்வேறு கட்டுப்பாடுகள்:

திங்கள் முதல் இயல்பு நிலைக்கு திரும்பவுள்ள பிரான்ஸ் – இரண்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு வெவ்வேறு கட்டுப்பாடுகள்:

114
0

பிரான்ஸில் – வைரசை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 17-ம் தேதி முதல் அமுலில் இருந்துவரும் ஊரடங்கு சட்டத்தை வருகிற திங்கட்கிழமை ஊரடங்கை விலக்கிக் கொள்ளப் போவதாக அந்நாட்டு பிரதமர் எட்வர்ட் பிலிப் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோஉஇனால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் 3000-க்கும் குறைவான நோயாளிகளே உள்ளனர் எனவும், கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு விகிதம் குறைந்துள்ளமையையும் சுட்டிக்காட்டிய பிரதமர் எட்வர்ட் பிலிப் வருகிற திங்கட்கிழமை ஊரடங்கை விலக்கிகொள்வதாக தெரிவித்துள்ளார்.

இருப்பினும், பாரிஸ் நகரில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் தொடரும் என தெரிவித்துள்ள பிரதமர் எட்வர்ட் பிலிப், கொரோனா பாதிப்பின் அடிப்படையில் பிரான்ஸ் நாடு சிவப்பு மற்றும் பச்சை ஆகிய இரண்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கு ஏற்ப கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.