
வரும் (11/05) திங்கள் முதல் கிளிநொச்சி மாவட்டம் இயல்பு நிலைக்கு திரும்பவுள்ளதாக அம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ரூவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இன்று காலை 10.00மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் அரசாங்க அதிபர் திருமதி.ரூபாவதி கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற பல்வேறு தரப்பினருடனான கலந்துரையாடலின் பின்னரே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறித்த கலந்துரையாடலில் எதிர்வரும் 11ம் திகதி ஊடரங்கு தளர்த்தப்படும் போது வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் சேவை பெறுகின்ற இடங்களில் கைகழுவதற்குரிய வசதியை ஏற்படுத்தல், மக்கள் ஒன்று கூடும் இடங்களில் சுகாதார விதிமுறைகளை பின்பற்ற வலியுறுத்தல், வைத்தியசாலை செயற்பாடுகளை வழமைக்கு கொண்டு வருவது தொடர்பாக பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.
இக் கலந்துரையாடலில் அரச திணைக்களத்தலைவர்களின் தலைவர்கள், தனியார் நிறுவங்களின் தலைவர்கள், முச்சக்கர வண்டி சங்க பிரதிநிதிகள், வர்த்தக சங்க பிரதிநிதிகள், தனியார் பேரூந்து உரிமையாளர் சங்க பிரதிநிதிகள் என மாவட்டத்திலுள்ள அனைத்துப்பிரிவினரும் கலந்து கொண்டிருந்தனர்.