Home உலக செய்திகள் அவதானமாக செயற்படாது விட்டால் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்: உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை!

அவதானமாக செயற்படாது விட்டால் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்: உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை!

80
0

கொரோனா நோ பரவல் இன்னமும் குறையாது உள்ள இச் சூழலில் உலக நாடுகள் அவதானமாகவும், சரியான நடைமுறைகளை பின்பற்றாமலும் விட்டால் பாரிய விளைவுகளை சந்திக்க நேறிடும் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.

இதுவரை கொரோனாவால் உலக நாடுகள் அனைத்திலுமாக 38,34,140 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2,65,240 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகள் (LockDown) இயல்பு நிலை முடக்கத்தினை, அல்லது ஊரடங்கு சட்டத்தை தளர்த்த இருப்பது அந்த நாடுகளில் இன்னும் பல்லாயிரம் மக்கள் பாதிக்கப்படவும், மேலும் இறப்புக்கள் அதிகரிக்கவும் வாய்ப்புக்களை ஏற்படுத்தியிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள உலக சுகாதார ஸ்தாபனம் தொற்று நீக்கல், சமூக இடைவெளி, போதிய மருத்துவ உதவி மற்றும் சுகாதார ஆலோசனைகளை வழங்கி நோய் பரவலில் இருந்து உயிர்களை காக்குமாறும் தெரிவித்துள்ளது.