Home செய்திகள் பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கூடிய மழை : எச்சரித்துள்ள இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம்

பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கூடிய மழை : எச்சரித்துள்ள இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம்

126
0

இலங்கையின் பெரும்பாலான பிரதேசங்களில் எதிர்வரும் நாட்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், மத்திய, சப்ரகமுவ, வடமேல், தென், ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை, மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

யாழ்ப்பாணம்,புத்தளம் மற்றும் தென்மற்றும் மேல் மாகாணங்களிலும் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதோடு மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.