Home முக்கிய செய்திகள் நாடாளுமன்றம் அற்ற ஜனாதிபதி ஆட்சிக்கு எதிராக 8 மனுக்கள் உயர் நீதிமன்றில் தாக்கல்:

நாடாளுமன்றம் அற்ற ஜனாதிபதி ஆட்சிக்கு எதிராக 8 மனுக்கள் உயர் நீதிமன்றில் தாக்கல்:

71
0

இலங்கையில் நாடாளுமன்றத்தை கலைத்து குறிப்பிட்ட காலத்துக்குள் தேர்தல் நடாத்தி புதிய நாடாளுமன்றம் இல்லாமல் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ தனிமனித ஆட்சி செய்வதற்கு எதிராக உயர் நீதிமன்றில் 8 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

பிரபல ஊடகவியலாளர் விக்டர் ஐவன், மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, மற்றும் ஏழு பேர் தனியாகவும், நேற்று உயர்நீதிமன்றத்தில் இந்த மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

இதே வேளை, ஜூன் 20 ஆம் திகதி பொதுத்தேர்தல்களை நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளமைக்கு எதிராகவும் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கலைக்கப்பட்ட நாடாளுமன்றை எக்காரணம் கொண்டும் கூட்டப்போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையிலேயே மேற்படி மனுக்கள் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

எதிர் வரும் 11ஆம் திகதி (11/05/2020) உயர்நீதிமன்றத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், இந்த மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.