
COVID-19 வைரஸ் தாக்கத்தால், ஐரோப்பாவில் அதிக உயிர் பலிகளையும், நாளாந்தம் பல ஆயிரக்கணக்கான நோயாளர்களையும் சந்தித்த இத்தாலி நாட்டின் நிலைமையை பார்த்து உலகமே பெரும் அச்சமும், வியப்பும் அடைந்திருந்தது.
ஆனால் தற்போது கொரோனா நோயினால் இத்தாலியில் இறந்தவர்களை விட பிரித்தானியாவில் அதிக இறப்புக்கள் பதிவாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மாலை பிரித்தானியாவின் சுகாதாரப்பிரிவால் வெளியிடப்பட்ட 693 பேரது புதிய மரணங்களை அடுத்து கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 29,427 ஆக உயர்வடைந்துள்ளதோடு, இத் தொகை இதுவரை ஐரோப்பாவில் அதிக உயிர்பலிகளைக் கொண்ட நாடாக இருந்த இத்தாலியை விட அதிக எண்ணிக்கையாக உயர்வடைந்தமையால் தற்போது பிரித்தானியாவே ஐரோப்பாவில் அதிக உயிர் பலி கொண்ட நாடாக இடம்பிடித்துள்ளது.
அதே வேளை, ஐரோப்பாவில் 29,315 இறப்புக்களைக் கொண்ட நாடான இத்தாலி இரண்டாம் இடத்திலும், 25,613 இறப்புக்களைக் கொண்ட நாடான ஸ்பெயின் முன்றாம் இடத்திலும், 25,531 இறப்புக்களைக் கொண்ட நாடான பிரான்ஸ் நான்காம் இடத்திலும், 8,016 இறப்புக்களைக் கொண்ட நாடான பெல்ஜியம் ஐந்தாம் இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.