Home செய்திகள் யாழில் , தென்னிலங்கை பெண் உயிரிழப்பு – மரணத்தில் சந்தேகம்!

யாழில் , தென்னிலங்கை பெண் உயிரிழப்பு – மரணத்தில் சந்தேகம்!

60
0

யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் காச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த தென்னிலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்கா மாவத்தையைச் சேர்ந்த 78 வயது பெண்ணே இவ்வாறு நேற்று (04/05) உயிரிழந்தவராவார்.

கொரோனா நோய்த் தொற்று சந்தேகத்தில் கொழும்பிலிருந்து கொண்டுவரப்பட்டு கொடிகாமம் கெற்பேலி தனிமைப்படுத்தல் முகாமில் தங்கியிருந்த குறித்த பெண் காச்சல் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த 02/05 அன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணை பரிசோதித்த வைத்தியர்கள் அவருக்கு கொரோனா நோய் இல்லை என தெரிவித்து சாதாரண “வாட்” ற்கு மாற்றியுள்ள நிலையிலேயே அவருக்கு திடீரென மூச்சு எடுக்க முடியாமல் அவதியுற்று நேற்று மரணமடைந்துள்ளார்.

கொரோனா நோயில் அறிகுறியும், அதன் அதிக தாக்கமும் காச்சல், இருமல், தொண்டையில் சளி கட்டுதல், இறுதியில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணம் நிகழும் என பல நாடுகளிலும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த பெண் அதை ஒத்த நோயினாலேயே இறந்துள்ளமை குறிப்பிடத்தக்து.

இதனால் இலங்கையில் பரிசோதனை செய்யப்படும் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் கொரோனா நோயைக் கண்டறியும் பரிசோதனைக் கருவிகள் தவறானவையா அல்லது சரியான முறையில் பரிசோதனைகள் இடம்பெறுவதில்லையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதே வேளை, மரணமான குறித்த பெண்ணின் குடும்பத்தினரும் கொடிகாமம் கெற்பேலி முகாமிலேயே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.