
இலங்கையில் கொரோனா நோயினால் மேலும் ஒருவர் இறந்ததை அடுத்து குறித்த நோயினால் இறந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வடைந்துள்ளது.
ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த குருநாகல் பொல்பித்திகம பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறாக உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இதே வேளை, நேற்றும் இன்று இதுவரையும் கண்டறியப்பட்ட 37 புதிய கொரோனா நோயாளர்களுடன் சேர்த்து இலங்கையில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 755 ஆக உயர்வடைந்துள்ளது.
கடந்த 10 நாட்களில் மட்டும் 400 க்கும் அதிகமான நோயாளர்கள் இனம்காணப்பட்டுள்ள நிலையில், அதிக நோய் பரவல் மற்றும் அதிக உயிரிழப்புக்கள் ஏற்படலாம் என பலதரப்பாலும் எதிர்வு கூறப்பட்டுள்ள சூழலிலும், இலங்கை அரசாங்கம் தேர்தலை நடாத்துவதற்காக நாடை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு பல வழிகளிலும் முனைந்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.
