
நோய்த் தொற்று அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த சிகை அலங்கரிப்பபு நிலையங்களை (Barber Shop) மீளத் திறப்பதற்க்உ சுகாதார அமைச்சு அனுமதியளித்துள்ளது.
நேற்று (04/05) சுகாதார அமைச்சுடனான அழகுக்கலை நிபுணர்களின் சந்திப்பின் பின்னரே சுகாதார அமைச்சர் இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.
சிகை அலங்கார நிலையங்கள் மற்றும் ஒப்பனை நிலையங்களை மீள இஅயங்க அனுமதி அளித்த சுகாதார அமைச்சு அது தொடரான விதிமுறைகளையும் வழங்கியுள்ளதுடன், விதிமுறைகளை பின்பற்ற தவறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளையும், விதிமுறைகளும் பின்பற்ரப்படுகின்றனவா என்பதை சுகாதாரப் பிரிவினர் மேற்பார்வை செய்வர் எனவும் தெரிவித்தார்.