Home செய்திகள் மிருசுவிலில் வாள் வெட்டு – ஒருவர் பலி, நால்வர் காயம்!

மிருசுவிலில் வாள் வெட்டு – ஒருவர் பலி, நால்வர் காயம்!

268
0

யாழ்ப்பாணம்- மிருசுவிலில், நேற்றிரவு (03/05) நடந்த மோதல் ஒன்றில், ஒருவர் வாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதோடு, நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

மிருசுவில், கரம்பகம் பகுதியில், நேற்று இரவு 7.30 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில் மிருசுவில் மருதங்குளத்தை சேர்ந்த இராஜகோன் சிவகுமார் (40-வயது) என்பவரே வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளவர் என தெரியவந்துள்ளது.

படுகாயமடைந்த நால்வரும், சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதும் அதில் இருவரின் நிலை மோசமாக இருந்தமையால் அவர்கள் இருவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இம் மோதலில், 40 வயதுடைய தர்மகுலசிங்கம் கிருபாகரன், 30 வயதுடைய தர்மகுலசிங்கம் விஜயகுமார் , 27 வயதுடைய தர்மகுலசிங்கம் சிந்துஜன், 27 வயதுடைய சிவகுமார் சுஜிதா ஆகியோரே இந்தச் சம்பவத்தில் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உறவினர்களுக்கு இடையிலான மோதலே, இந்த வாள்வெட்டுச் சம்பவத்துக்குக் காரணம் என்று கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.