Home முக்கிய செய்திகள் பிரிட்டனில் சிக்குண்டிருந்த 207 மாணவர்கள் இலங்கை வந்து சேர்ந்தனர்.

பிரிட்டனில் சிக்குண்டிருந்த 207 மாணவர்கள் இலங்கை வந்து சேர்ந்தனர்.

91
0

கொரோனா அச்ச சூழல் காரணமாக உலகளாவிய ரீதியில் விமான சேவைகள் தடைப்பட்டதால் பிரிட்டனில் சிக்குண்டிருந்த 207 இலங்கை மாணவர்கள் இன்று இலங்கை வந்து சேர்ந்தனர்.

நேற்றைய தினம் (03/05) லண்டன் ஹீத்றோ விமான நிலயத்தில் இருந்து குறித்த பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட சிறீலங்கன் எயார்லைன்ஸ் ற்கு சொந்தமான UL-504 விமானம் இன்று உள்ளூர் நேரம் காலை 3:30 க்கு கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

பயணிகளிந் பொதிகளுக்கு விமான நிலையத்தில் வைத்து தொற்று நீக்கும் நடவடிக்கை முடிந்ததும், விமான நிலையத்தில் இருந்து பயணிகள் அனைவரும் இராணுவத்தின் பாதுகாப்புடன் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு சிறப்பு பேரூந்துகள் மூலம் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.