Home முக்கிய செய்திகள் பிரதமர் தலைமையில் அலரிமாளிகையில் நடைபெற்ற விசேட சந்திப்பு!

பிரதமர் தலைமையில் அலரிமாளிகையில் நடைபெற்ற விசேட சந்திப்பு!

250
0

கொரோனா அச்ச சூழலில் நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சனைகள், மற்றும் அதிலிருந்து நாட்டை எவ்வாறு மீட்டெடுப்பது தொடர்பாக உரையாடுவதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனைமையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பொன்று அலரிமாளிகையில் இன்று (04/05) இடம்பெற்றது.

சுமார் இரண்டு மணித்தியாலங்கள் (10:45 – 12:45) இடம்பெற்ற இக் கலந்துறையாடலில் ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் பங்கேற்காமல் புறக்கணித்த போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட்ட ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.