Home செய்திகள் பணி தவிர்ப்பில் தபால் ஊழியர்கள்: ஊழியர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் இன்மையே காரணமாம்:

பணி தவிர்ப்பில் தபால் ஊழியர்கள்: ஊழியர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் இன்மையே காரணமாம்:

94
0

தமது ஊழியர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் குறைந்தளவிலேயே காணப்படுவதால் பணியாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே போதுமான அளவில் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் தபால் நிலையங்களில் பின்பற்றுவதற்கு ஏதுவான சூழல் உருவாகும் வரை பணியிலிருந்து விலகியிருக்க தீர்மானித்துள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவுகின்ற அச்ச சூழ்நிலை தொடர்பிலும், பணிகளை மேற்கொள்ளுமாறும், பொது நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் அரச பணியாளர்கள் தமது கடமைகளை மேற்கொள்ளும் போது அவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்தும் நிபந்தனைகள் தொடர்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமையவே தமது ஊழியர்கள் பணியாற்றும் போது பாதுகாப்பு உபகரணங்கள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட போதியளவு உபகரணங்களும், வசதிகளும் இல்லை. தபால் திணைக்களத்தில் 25,000 பேர் பணியாற்றுகின்றார்கள். பணியாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் அச்சுறுத்தல் காணப்படுகின்றது. எனவே தான் நாம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளோம். என்றார்.

இன்று திங்கட்கிழமை முதல் பணியிலிருந்து விலகியிருக்க தபால் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.