Home செய்திகள் கொரோனா நோயைக் கண்டறியும் (PCR) பரிசோதனை யாழ், போதனா வைத்திய சாலையில் ஆர்ம்பம்:

கொரோனா நோயைக் கண்டறியும் (PCR) பரிசோதனை யாழ், போதனா வைத்திய சாலையில் ஆர்ம்பம்:

51
0

கொரோனா நோயைக் கண்டறியும் (PCR) பரிசோதனை இன்று (04/05) முதல் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டாலும் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலும் தொடர்ந்து பரிசோதனைகள் இடம்பெறும் என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் சத்திரமூர்த்தி அவர்கள் தெரிவித்தார்.

இன்று முதற்கட்டமாக கொரோனா நோய் சந்தேகத்தில் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்கள் உட்பட மேலும் சிலருக்கு பரிசோதனைகள் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.