
இலங்கையில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 705 ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்றைய தினம் 12 பேரும், இன்று இதுவரை (மதியம் 12 மணி வரை) இனம்காணப்பட்ட 3 பேருமாக 15 புதிய கொரோனா நோயாளர் இனம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 12 பேர் கடற்படையினர் எனவும், ஏனைய மூவரும் கடற்படையினரது உறவினர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தனிமையான இடங்களில் உள்ள கட்டிடத்தில் கொண்டு சென்று விடப்படும் நோய்த் தொற்று சந்தேக நபர்கள் அனைவரும் போதிய வசதிகள் இல்லாமல் ஒன்றாகவே இருப்பதால் அங்கு நோத் தொற்று அபாயம் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டு வரும் நிலையில், கொரோனா நோயாளர் எண்ணிக்கை மேலும் பல மடங்காக அதிகரிக்கவே வாய்ப்புக்கள் உள்ளன.
