Home செய்திகள் முள்ளியவளை காட்டில் தகனம் செய்யப்பட்ட சடலங்கள்!

முள்ளியவளை காட்டில் தகனம் செய்யப்பட்ட சடலங்கள்!

118
0

கேப்பாபிலவு தனிமைப்படுத்தல் முகாமில் உயிரிழந்த முதியவர்கள் இருவரது சடலங்களும் பொலிஸார் முன்னிலையில் முள்ளியவளை காட்டில் தகனம் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு – ஜெயசிங்கபுரத்தை சேர்ந்த யாசகர்களான இரு முதியவர்களும் கொரோனா நோத் தொற்று உள்ளதான சந்தேகத்தில் வடக்கிற்கு அழைத்துவரப்பட்டு கேப்பாபிலவில் உள்ள விமானப்படைத் தளத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர்.

இருவரது உடல்களையும் முல்லைத்தீவில் தகனம் செய்ய முற்பட்ட போது கிராம மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டு, பின்னர் நேற்றைய தினம் (02/05) இரவு முள்ளியவளை காட்ட்டுப்பகுதியில் இருவரது உடல்களையும் தகனம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.