Home செய்திகள் வன்முறையாளர்களாக செயற்பட்ட பொலிஸார் மீது பாரபட்சமற்ற விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்: சபா குகதாஸ்

வன்முறையாளர்களாக செயற்பட்ட பொலிஸார் மீது பாரபட்சமற்ற விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்: சபா குகதாஸ்

113
0

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கில் பொது மக்கள் மீது பொலிஸார் நடாத்திய தாக்குதலைக் கண்டிப்பதுடன் பாரபட்சமற்ற விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென தாம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) அமைப்பின் இளைஞரணிச் செயலாளர் சபா குகதாஸ் தெரிவித்தார்.

இவ்விடயம் குறித்து அவர் தெரிவிக்கையில்,

நாட்டின் சட்ட ஒழுங்குகளை பாதுகாக்க வேண்டிய பொலிஸார் வன்முறையாளர்களாக செயற்பட்டு பெண்கள் மீது அடிதடிப் பிரையோகங்களை மேற்கொண்டமை மக்கள் மத்தியில் அச்சத்தையும் கொதி நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான பாரபட்சமற்ற விசாரணை உடனடியாக மேற் கொள்ளப்பட வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி கிடைப்பதுடன் இவ்வாறான சம்பவங்கள் மீள நடைபெறாது என்பதை நீதித்துறை உறுதி செய்ய வேண்டும்.

கொரோனா பாதிப்பு ஒரு புறம் இருக்க இவ்வாறான மேலதிக பாதிப்புக்கள் மக்களின் அமைதி வாழ்வுக்கு ஆரோக்கியமானது இல்லை. எனவே அரசாங்கம் உரிய விசாரணைகளை மேற்கொண்டு நியாயத்தை மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும் – என்றார்.