Home தாயக செய்திகள் யாழில் – தென்னிலங்கையை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது!

யாழில் – தென்னிலங்கையை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது!

66
0

யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 76 பேருக்கு நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட COVID-19 பரிசோதனையின் போது ஒருவருக்கு மட்டும் கொரோனா நோய் உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை உறுதி செய்து தகவல் வெளியிட்ட யாழ்.போதனா வைத்தியசாலைப்பணிப்பாளர் க.சத்தியமூர்த்தி தெரிவிக்கையில்,

மேற்படி பெண் கடந்த ஏப்ரல் 11 ஆம் திகதி தென்னிலங்கை பகுதியிலிருந்து முழங்காவில் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு அங்கு தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த நிலையிலேயே நேற்றையதினம் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருடைய சகோதரனுக்கு கொரோனா தொற்று ஏப்ரல் 13 அன்று உறுதிப்படுத்தபட்ட நிலையிலேயே அவரது குடும்ப உறுப்பினர்கள், நெருங்கி பழகியவர் என்ற அடிப்படையில் குறித்த பெண் முழங்காவில் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு அங்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

இதேவேளை யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட COVID-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 76 பேரில், ஏனைய 75 பேருக்கு கொரோனா தொற்றில்லையென உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.