Home தாயக செய்திகள் கொரோனா நோயாளர் எண்ணிக்கை 665 ஆக அதிகரித்தது!

கொரோனா நோயாளர் எண்ணிக்கை 665 ஆக அதிகரித்தது!

62
0

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் சிலர் பாதிக்கப்பட்டுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதை அயடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 665 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் 14 பேருக்கும், இன்று மதியம் 12:00 மணிவரை 3 பேருக்கும் COVID-19 வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டதை அடுத்தே இலங்கையின் இதுவரையான மொத்த கொரோனா நோயாளர் எண்ணிக்கை 665 ஆக உயர்வடைந்துள்ளது.

இலங்கையில், 8 வாரங்களாக ஆமை வேகத்தில் பரவி வந்த கொரோனா நோய் கடந்த இரு வாரத்தில் (ஏப்ரல்18 முதல் மே1 – மதியம் 12:00 வரை) மட்டும் 422 பேரை தாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள தென்னிலங்கஇயின், கொழும்பு, புத்தளம் ஆகிய பகுதிகளில் இருந்து மீன் கொள்வனவிற்காக வடபகுதி வரும் வியாபாரிகளால் வடமாகாணத்திற்கு கொரோனா அச்சுறுத்தல் அதிகம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.